வனம் சேர்ந்த ஐவணம் அமேசான் நேரடி ஈ புக்

Amazon directly release

வனம் சேர்ந்த ஐவணம் அமேசான் நேரடி ஈ புக்

Amazon நேரடி வெளியீடு 

https://www.amazon.in/dp/B0C55PZ55Y

வனம் சேர்ந்த ஐவணம் !!

வனம்_ காடு 

ஐவணம் _ மருதாணி 

அரசூர் ஆரம்பப் பள்ளி 

17 வருடங்களுக்கு முன்பு 

இன்று முதல் நாள் பள்ளி ஆரம்பமாகிறது.. 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அழ அழ கொண்டு வந்து வகுப்பறையில் தள்ளிவிட்டு சிலர் சென்று கொண்டிருக்க .. சிலர் அழுது கொண்டிருக்கும் தன் குழந்தைகளை அவர்களும் ஏக்க பெருமூச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்..ஆறு வயது வரை தன் மடியில் தவழ்ந்த குழந்தை இதோ அடுத்த வாழ்க்கை  படியில் கால் எடுத்து வைக்கிறது ... என் குழந்தையின் எதிர்காலம் நன்றாக வருமா , படித்து இன்ஜினியராக டாக்டராக வருவானா ? என ஆயிரம் ஏக்கங்களோடு பெற்றோரின் இமைகள் நனைந்து போயிருந்தது..  மரத்தின் அடியில் இருந்து ஒரு  சத்தம் அனைவர் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது .. 

இப்படி முதல் நாளே அழுதுகிட்டுஇருந்தா எப்படி?  எல்லாருக்கும் இது ஒரு நாள் வந்துதானே ஆகணும்,   பள்ளிக்கூடத்துக்கு போனாதானே நாளைக்கு பெரிய ஆளா வர முடியும்,  முதல் நாளே இப்படி அழுதா எப்படி கண்ணு தொட , என்ற அதட்டல் சத்தம் கேட்டு .. அனைவரும் அப்புறம் திரும்ப...

27 வயது இளைஞன் கண்களை கசக்கி கொண்டு நிற்க ... அவனை கடிந்து கொண்டு நின்றான் ஆறு வயது மகன் ..

ஏப்பா அழாத,  நீ இப்படி அழுதா நான் எப்படி போக?..

அழல சாமி என்று கரகரத்து வந்தது குரல் ... 

ப்ச் வா என பிஞ்சு கைகள் விரிய,  அந்த ஆறடி உடல் நாலாக மடிந்து மகன் கைக்குள் அடங்கி விட்டது ..

ப்பா 

சொல்லு சாமி ..

ப்ச் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் , என பெயர் சொல்லி கூப்பிடுங்க,  அது என்ன சாமி? ஒழுங்கா அரவிந்துன்னு சொல்லி கூப்பிடுங்க..

எனக்கு நீ எப்பவும் சாமிதான்

போப்பா நீதான் சாமின்னு சொல்ற,  ஊர்ல எல்லாரும் என்ன சொல்றாங்க தெரியுமா ?

என்ன சொல்றாங்க சாமி ?

ம்ம் வண்ண வண்ணமா சொல்றாங்க... நான் பிறக்கும்போதே அம்மாவ முழுங்கிட்டு பிறந்துட்டேன்னு சொல்றாங்க,  நீ இப்படி பொண்டாட்டி இல்லாம தனியா நிக்குறதுக்கு நான்தான் காரணம்னு சொல்றாங்க,  நான் ஒரு ராசி கெட்டவன் அதனாலதான் வாழ வேண்டிய வயசுல,  நீ வாழாம இப்படி  பையனோட தனிமரமா நிற்கிறேன்னு சொல்றாங்க..

யாரு சொன்னா?  என்று இவ்வளவு நேரம் குழந்தையாக தன் மகன் நெஞ்சுக்குள் அடங்கி இருந்த அவன் சினம் மிகுதியில் திமிறி கொண்டு எழும்ப ..

அட!!  உடனே கோவம் வந்திடுமே , அதனாலதான் உன் முன்னாடி யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க..  என் முன்னாடி சொல்றாங்க ..எத்தனை நாள் தான்ப்பா நீ கையையும் , காலையும் சுட்டு எனக்கு சாப்பாடு எல்லாம் செஞ்சு தருவ .. ஒரு கல்யாணம் கட்டிக்கோன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறீங்க எப்பப்பா கல்யாணம் கட்டிக்குவ?  உனக்கு வேணும்னா பொண்டாட்டி ஆசை இல்லாம இருக்கலாம்,  எனக்கு அம்மா வேணும் ஆசையா இருக்கு என்ற மகனை பரிதாபமாக பார்த்தான் ..கேட்பது விலை உயர்ந்த பொருளாக இருந்தால் வாங்கி கொடுத்து விடலாம்,  உயிர் உள்ள செல்லப் பிராணியாக  இருந்தால் தேடிக் கொடுத்து விடலாம் , உறவுகளாக இருந்தால் சேர்த்து வைத்து விடலாம் , ஆனால் அவனை பெற்றதோடு இந்த உலக பாரம் போதும் என்று உயிரை விட்ட அவன் அன்னையை எப்படி அவனால் திருப்பிக் கொடுக்க முடியும்.. 

என்னவோ போப்பா நீ என்கூட சேர்ந்து உருப்படாம போற என்றவன் பார்வை முதல் வகுப்பு டீச்சரை பார்க்க .. 

எப்போய் .. 

என்ன சாமி ? அவன் புக் பையை தூக்கி கொண்டு மகனோடு நடக்க ..

அந்த டீச்சர் எப்படி இருக்கு .. அவர்களை பார்த்து சிரித்து கொணடு வந்த டீச்சரை மகன் கை காட்ட 

ம்ம் நல்லா இருக்கு ஏன் சாமி ? 

இரு வர்றேன் என குடுகுடுவென ஓடிய மகன்..

டீச்சர் டீச்சர் நில்லுங்க...

என்ன குட்டி ?

உங்களுக்கு குழந்தை இருக்கா?

ஹாஹா எனக்கு கல்யாணமே ஆகல குட்டி 

ஓஓஓ அப்போ எங்க அப்பாவை கல்யாணம் கட்டிக்கிறீங்களா என்றதும் அவனுக்கு தூக்கி வாரிப்போட ஓடி போய் மகன் வாயை பொத்தி தூக்கி கொண்ட ஆடவன் 

மன்னிச்சிடுங்க தாயி ... தகப்பன் கையை கடித்து விலக்கிய மகன் ..

எப்போ நீ சும்மா இரு , நீயும் பொண்ணு பாக்க மாட்டேங்குற,  நான் பாத்து கட்டி வச்சாலும் வேண்டாங்கிற,  நீ அமைதியா இரு .. நான் பார்த்துக்கிறேன் என்று பெரிய மனுஷன் தோரணையில் தகப்பனை அதட்டிய மகன்..

டீச்சர் என் அப்பா பேரு தர்மதுரை, 

ஊர்ல   துரைன்னு சொல்லுவாங்க...  அரசூர் பஞ்சாயத்து தலைவர் , ரெண்டு வீடு,  விவசாயம் நிலம்  ஏகப்பட்டது இருக்கு .. பணத்துக்கு பஞ்சம் இல்லை ஆனால் எங்க அப்பாவோட பொண்டாட்டி செத்துப் போச்சு,  இப்ப நானும் அப்பாவும் மட்டும்தான்..  நீங்க கல்யாணம் கட்டிக்கிட்டீங்கன்னா,  உங்கள கண் கலங்காம நாங்க ரெண்டு பேரும் வச்சுக்குவோம். என்று  எங்கேயோ பார்த்த படத்தை பார்த்துவிட்டு அவன் டயலாக் பேச .. துரைக்கு உதற ஆரம்பித்தது.

தாயி.. அவன் குழந்தை தனமா ..

அட   தப்பா நெனைக்கல சார் ...சார் குழந்தை தாய்க்கு எங்கிறது போல  இருக்கு .. ஏன் சார் இன்னொரு கல்யாணம் கட்ட மாட்டேன்னு சொல்றீங்க ..உங்கள பத்தி ஊர்ல உயர்வா பேசிக்கிட்டாங்க அதனால கேட்டேன்..  தப்பா நினைக்காதீங்க... 

இல்ல தாயி,  அவனுடைய இந்த சிரிப்புக்கும் பேச்சுக்கும் வேற எது நிகராக போகுது..  இவனோட இந்த சிரிப்பு கடைசி வரைக்கும் நிலைச்சிருந்தா அதுவே போதும்..  அதுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்..  

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தனிமரம்..

அவன்...  தோப்பாக வாய்ப்பு இருந்தாலும் வாய்ப்பை தட்டி கழிக்கும் அழகன் அவன் ... தன் மகன் மட்டும் மீதி வாழ்க்கை என வாழும் உத்தமன் அவன் .... 

தன் தந்தை தனிமைக்கு ஒரு துணை சேர்த்து விட வேண்டும் என ஆசையில் தவிக்கும் மகன் ..

தான் இணை சேர்ந்து விட்டால் அவன் துணை இன்றி போய் விடுவான் என ஆசைகளை துறந்து விலகி  ஓடும் தகப்பன் ...

கடவுள் எப்பவும் தேவையான நேரத்தில் அருள் கொடுக்க மாட்டார் .. போடா நீ ஒன்னும் கருணையே காட்ட வேண்டாம் என மனம் நோகும் வேளையில் அருளை குண்டக்க மண்டக்க அள்ளி அள்ளி குடுப்பான்,  அப்படித்தான் துரை வாழ்க்கை ஆக போகிறது என தகப்பன் மகன் இருவரும் அறிந்திருக்க மாட்டார்கள்...

******** 

இருபது வருடங்கள் கழித்து இன்று 

காலை பின் நாற்பது தொட்ட துரை செய்தி தாளை புரட்டி கொண்டிருக்க  அவர் கண்ணில் புடவை கீழ்த்தளம் தெரிய  செய்தித்தாளை நகட்டி துரை பார்க்க ..

வணக்கம் சார் என்று நடுத்தர வயது பெண் ஒருத்தி நின்றாள்....

வணக்கம் தாயி யார் நீங்க ?

நான் மருதாணி  , இந்த ஊர் ஆஸ்பத்திரிக்கு நர்ஸ் வேணும்னு விளம்பரம் பார்த்து வந்தேன் என்ற பெண்ணின் ஆடை சொன்னது அவள் கைம்பெண் என்று .... 

ஓஓஓ ...என்றவன் கவனத்தை மகன் ஈர்த்து கொண்டான் 

துரைஏஏஏஏஏஏஏஏ என் சார்ஜரை காணல,  எங்க வச்ச என ஓடி வந்த அரவிந்த் ... கண்கள் அகல நின்றான் ..

வாவ்!!! வாட் ஏ ப்யூட்டி என தன்,வீட்டு கேட்டை திறந்து கொண்டு ஓடி வந்த பெண்ணின் மீது அரவிந்த் பார்வை  ஆர்வமாக படிந்து,  அருகே நின்ற நடுத்தர வயது பெண்ணை தொட்டது .. 

அது யாரு ?

என் பொண்ணு துர்கா என மருதாணி மகளை அறிமுகம் செய்து வைக்க,  அரவிந்த் கண்கள் அவளை ஆசையாக வருடியது ...  

அரவிந்த் காதலுக்கு எதிரி தன் தந்தை என கனவிலும் நினைத்திருக்க மாட்டானோ? இளம் ஜோடி  இருவரும் கண்ணால் கதை பேச , ஆனால் கடவுள் முடிச்சி போட்டதோ இவன் தந்தை துரைக்கும் , அவள் அன்னை மருதாணிக்கும்..

எடக்கு மடக்கா ஒரு காதல் !!

இந்த ஆண்கள் வனத்தில் மருதாணி வாசம் வீசுமா?புயல் வீசுமா??

சைட்ல ஜூன் மாதம் இடையில் வரூம்.